“காலா” படத்தின் டப்பிங் இன்று ரஜினி பேசினார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கம் இரண்டாவது படம் காலா.  நடிகர்  தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நானா படேகர், சமுத்திரக்கனி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலா படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்துவருகின்றன.

காலா படத்தின் டப்பிங் பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது. இந்த நிலையில் சென்னை மைலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெற்று வரும் டப்பிங் பணியில் இன்று  ரஜினி கலந்துகொண்டார்.

சுமார் இரண்டு மணி நேரம் டப்பிங் பேசினார்.