அரசியல் சரிவராது: ரஜினியிடம் நேரடியாகச் சொன்ன நடிகர்

Must read

ஜினிக்கு அரசியல் சரிவராது என்று அவரது நண்பரும், இந்தி நடிகருமான நானா படேகர் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர்,  தமிழில் பொம்மலாட்டம் உட்பட  சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் ரஜினி நடிக்கும் காலா படத்திலும் நடித்திருக்கிறார்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ரஜினி மிகவும் எளிமையான மனிதர் அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது” என்றார்.

மேலும், “இந்திய அரசியல் சாக்கடை போன்றது. அதில் நல்லவர்கள் இறங்க முடியாது. அப்படி இறங்கியவர்களால் வெற்றிபெற முடியாது. இதை நான் அவரிடம்  நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். அரசியலில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு எதிராக மக்கள் போராடுவார்கள். அப்போது திரைத்துறை மூலம் கிடைத்த புகழ் அனைத்தையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆகவே அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி  இன்னும் தீவிரமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்”  என்று நானா படேகர் தெரிவித்திருக்கிறார்.

More articles

Latest article