ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.

இந்த படத்தில் யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக ரஜினி டப்பிங் பேசும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் 📸புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.