விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிக்கவுள்ள படம் ‘தலைவி’. இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட படமாகும். இதில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார்.

இந்த படம் தமிழ் , தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது .

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

இப்படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.எம்.ஜி.ஆருடைய கெட்டப் சரியாக கொண்டுவர பல்வேறு லுக் டெஸ்ட்களும் நடைபெற்றது. இறுதியில் எம்.ஜி.ஆருடைய லுக்கை முடிவு செய்துவிட்டது படக்குழு. இதற்காக தன் கெட்டப்பையும் மாற்றியுள்ளார் அரவிந்த்சாமி. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.