சென்னை

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்கு நிலவரம் குறித்து ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது.

முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான ஆளுநரின் அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது., மேலும் ஆளுநர் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.  இது மிகவும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இதைச் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக கவர்னர்ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆளுநர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை தனது பதிலில்

”முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பிவி ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சிபிஐயின் விசாரணையில் உள்ளது.  

தவிர கே சி வீரமணி மீதான ஊழல் வழக்கில் விளக்கம் கிடைத்தால்தான்  மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,

ஏற்கனவே எம்.ஆர் விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம்  கிடைக்கவில்லை”

என்று விளக்கம் அளித்துள்ளது.