ஜுன்ஜுனு

மீண்டும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ..10000 வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

 

அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம் 25 ஆம் தேதி காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.  ராஜஸ்தானில் ஆட்சியைத் தக்க வைக்கக் காங்கிரசும், அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜகவும் தீவிரமாகப் போராடி வருவதால் மாநில தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.

நேற்று ஜுன்ஜுனுவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் அம்மாநில  முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொண்டார். முதல்வர் உரையாற்றும்போது மாநில மக்களுக்கு 2 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார்.

அவர்,

‘கிரகலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை தவணைகளாக வழங்கப்படும்.

இதைப்போல 1.05 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.  ராஜஸ்தானில் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்தவுடன் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்’

என்று கூறினார்.

மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.