பெங்களூரு

ன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன.

தற்போது 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இந்த லீக் போட்டிகள் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும்.

இன்று பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கத்தில் நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகிறது.

ஏற்கனவே நடந்த போட்டிகளில் தலா ஒரு வெற்றி, 3 தோல்வி என்று 2 புள்ளியுடன் உள்ள இவ்விரு அணிகள் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும். ஏதாவது ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டிய நிலையில் உள்ளதால் இவ்விரு அணிகளுக்கும் இது சவாலாக இருக்கப்போகிறது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான்,  ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், அட்கின்சன் அல்லது மார்க்வுட்.

இலங்கை: பதும் நிசாங்கா, குசல் பெரேரா, குசல் மென்டிஸ் (கேப்டன்), சமரவிக்ரமா, சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, துஷன் ஹேமந்தா அல்லது வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதுஷன்கா.