டில்லி

பாஜக அரசு ராமரது பண்புகள் எதையும் பயன்படுத்தவில்லை என கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் டில்லியில் தசரா விழா நடந்த போது பிரதமர் மோடி,

”அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ராமநவமியில் அங்குச் செய்யப்படும் பிரார்த்தனை, உலகம் முழுவதும் மகிழ்ச்சியை உருவாக்கும்”

என்று கூறினார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினருமான கபில்சிபல் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,

”பாஜகவினரின் கவனத்துக்கு. அரசியல் ஆதாயத்துக்காக ராமர் பெயர் எத்தனை தடவை பயன்படுத்துவீர்கள்?  நீங்கள் ஏன் ராமரின் குணநலன்களை கடைப்பிடிப்பதில்லை?. 

ராமரது வீரம், தீரச்செயல், விசுவாசம், கருணை, அன்பு, கீழ்ப்படியும் தன்மை, துணிச்சல், சமத்துவம் ஆகிய பண்புகளில் எதையுமே உங்கள் ஆட்சி பின்பற்றவில்லை” 

என்று அவர் பதிந்துள்ளார்.