கரௌலி:
ராஜஸ்தானில் கலவரத்துக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய முதல்வர் அசோக் கெக்லாட் உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் புத்தாண்டாக கொண்டாடப்படும் நவ சம்வத்ஸர் விழாவை ஒட்டி, மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. அப்போது, அடையாளம் தெரியாத கும்பல் கற்களை அங்கு புகுந்து வீசியதால் கலவரம் மூண்டது. பல இடங்களில் தீ வைக்கப்பட்டதால், சில நிமிடங்களில் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனைதொடர்ந்து சூழலை கட்டுக்குள் கொண்டு வர, நாளை வரை கரவுலி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இணைய சேவை துண்டிக்கப்பட்டு, சுமார் 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்துக்கு காரணமான சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு முதலமைச்சர் அசோக் கெக்லாட் உத்தரவிட்டுள்ளார்.