திருப்தி:
திருப்பதி அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் டிவிட்டர் பதிவில், திருப்பதி அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது. நள்ளிரவு 1.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.