மும்பை: 
பிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் – மும்பை அணிகள் இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 100 ரன்கள் அடித்தார். மும்பை பந்து வீச்சாளர்களில் பும்ப்ரா, மில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், போலார்ட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 4 புள்ளிகளை பெற்ற ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

குஜராத் – டெல்லி அணிகள் இடையே நடந்த மற்றொரு போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் சுபம் கில்
அதிகபட்சமாக 84 ரன்கள் அடித்தார்.
டெல்லி அணி பந்து வீச்சாளர்களில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்களையும், கலீல் அகமது 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

172 ரங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

இதன் முலம் குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல்லில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சென்னை- பஞ்சாப் அணிகள் மொத உள்ளன.