Anna – Stalin thanks the leaders who attended the opening ceremony of the Artist Academy

புதுடெல்லி:
டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருகை தந்த தலைவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருகை தந்த தலைவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கழகத்தின் மீது கொண்டுள்ள அன்பால், இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த – வாழ்த்திய பல்வேறு தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், அவர்களது பிரதிநிதிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், நம்மிடையேயான உறவுப் பாலம் நாட்டைக் காக்க வலுவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.