டெல்லி: ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரியங்கா வதேரா இன்று ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடப்பாண்டு இறுதியில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா என ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,  காங்கிரஸ், பாஜக உள்பட மாநில கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக  தீவிர  பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே,, மிசோரம், தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், நாளை  ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தௌசா மாவட்டத்தில் இன்று நடைபெறும் காங்கிரஸ்  தேர்தல் பேரணியில், காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா கலந்துகொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து கூறிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் . இந்த தேர்தல் பேரணி கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் குறித்து கட்சியின் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் பேரணியில் பிரியங்கா காந்தி உரையாற்றுவார் என்றும்  தெரிவித்து உள்ளார்.

இந்த மாபெரும் பேரணியில்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா,  மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், பிசிசி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு! டிசம்பர் 3ந்தேதி வாக்கு எண்ணிக்கை…