மும்பை

க்களவை தேர்தல் வெற்றிக்காக புல்வாமாவை போல் மற்றொரு தாக்குதல் நடைபெறலாம் என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா நவநிர்மாண் சமிதி கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே. தமது கட்சியின் 13 ஆம் ஆண்டு விழா கூட்டத்தில் கலந்துக் கொண்டு தொண்டர்களிடையே தாக்கரே  உரையாற்றினார். அவர் தனது உரையில் பிரதமர் மோடி மீதும் பாஜக மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். அவரது குற்றசாட்டுக்கள் நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

ராஜ் தாக்கரே தனது உரையில், “பிரதமர் மோடி சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தோக்லாம் எல்லையில் சீனப்படைகள் குவிக்கப்பட்டன. அப்போது மோடி சீனப் பொருட்களை வாங்கக் கூடாது எனவும் அவற்றை நிராகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட சர்தார் படேல் சிலையின் பொருட்கள் எந்த நாட்டில் இருந்து வாங்கப்பட்டது என்பதற்கு இன்றுவரை பதில் அளிக்கவில்லை.

மோடி பிரதமர் ஆனதில் இருந்தே பல முக்கிய தேர்தல்களின் போது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. உதாரணமாக கடந்த 2015 ஆம் வருடம் பிரதமர் மோடி பாக் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை சந்தித்து பிறந்த நாள் கேக் அளித்தார். அதற்கு ஒரு வாரத்துகுள்ளாகவே பதான்கோட்டில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. அப்போது மூன்று மாதங்களுக்குள்ளாகவே நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற இருந்தன,

சென்ற மாதம் நடந்த புல்வாமா தாக்குதலையும் மோடி அரசு அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது. இதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உதவி புரிகிறார். இவர்களால் கடந்த 14ஆம் மாதம் நடந்த புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 45 சிஆர்பிஎஃப் வீரர்களும் அரசியல் பலி ஆடு ஆக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் உண்மைகளைக் குறித்து அஜித் தோவலிடம் விசாரணை நடத்த வேண்டும். அப்போது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வரும். அது மட்டுமல்ல மக்களவை தேர்தல் வெற்றிக்காக புல்வாமா தாக்குதலை போல் மற்றொரு பயங்கரவாத தாக்குதலும் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்கும்” என அதிர்ச்சியூட்டும் வகையில் கூறி உள்ளார்.