சென்னை:
சென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் 2000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் 2000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றல் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், “குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் தொடர்பான புகார்களை 044-4567 4567 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.