சென்னை:

மிழகத்தில் இன்று லேசாகவும், நாளை கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. சென்னையில் லேசான மழை பெய்து வந்த நிலையில்,  இன்று லேசான மழைக்கும், நாளை கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் கிண்டி, ராமாபுரம், தியாகராய நகர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மீனம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 3 நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது கொட்டி தீர்த்தது.

விழுப்புரம்மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. அன்னவாசல், வயலோகம், குடுமியான்மலை, பெருமாநாடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பாளையங்கோட்டை, சுத்தமல்லி, ஆலங்குளம், மாறாந்தை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் மழை பெய்தது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் மட்டும், அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.