துரை

நேற்று மதுரையில் பெய்த கன மழையால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் வெள்ளம் போல் புகுந்தது.

மதுரையில் கோடையை தூக்கி அடிக்கும் வகையில் கடந்த நான்கு தினங்களாக கடும் வெயில் அடித்து வந்தது.   மக்கள் வெயிலால் கடும் அவதி உற்றனர்.  நேற்று மாலை சுமார் 6.45 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆராமித்தது.  சிறிது சிறிதாக வலுவடைந்து நகரெங்கும் கன மழை பெய்தது.  பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓட துவங்கியது.

பெரியார் பஸ் நிலையம் எல்லீஸ் நகர் மேம்பாலம் ஆகிய இடங்களில் மழையினால் போக்குவர்த்து நெருக்கடி ஏற்பட்டது.   பஸ் நிலையத்தின் உள்ளே குளமாக மழை நீர் தேங்கியது.   பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.   போக்குவரத்து நெரிசலால், வாகனங்கள் ஊரிந்து சென்றன.    நகரின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஓடியது.

மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ஆடி வீதிகளில் சிறு மழை பெய்தாலும் நீர் தேங்குவது வழக்கமான ஒன்று,   நேற்று பெய்த கன மழையால்  சித்திரை வீதி வழியாக மழை நீர் வெள்ளமாக கோவிலுக்குள் புகுந்தது.   சன்னதி வழியாக தங்க கொடிமர மண்டபத்தினுள் வெள்ளம் புகுந்ததால்  பக்தர்கள் அவதிப்பட்டனர்.    மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப் பட்டது.

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராமநாதபுரம், கமுதி பகுதிகளிலும் நேற்று சாரல் மழை பெய்துள்ளது.   அங்கும் கடும் வெப்பம் வீசிய நிலையில் தற்போது குளிர்ந்து காணப் படுகிறது.

மீனாட்சி அம்மன் கோவிலில் மழை நீர் வெள்ளம் புகுந்த காட்சி வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலை தளங்களில் வைரலாக பாவி வருகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=boJm6e9jmY4]