நடிகர் தனுஷ் மீது மதுரை கதிரேசன் மீண்டும் புகார்!

மதுரை,

டிகர் தனுஷை தங்களது மகன் என்ற கூறி வந்த மதுரை அருகே உள்ள மேலூர் கதிரேசன் மீண்டும் தனுஷ் மீது புகார் கூறி உள்ளார்.

அதில் நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலி என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை அருகே உள்ள மேலுார்  பகுதியை சேர்ந்த  கதிரேசன், அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று  மேலுார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டு கிளை யில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் காரணமாக நடிகர் தனுஷின் பள்ளி சான்றிதழ்கள் மற்றும் மருத்துவ சோதனைகள்  நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் தங்களது மகன் என்ற கூறிய கதிரேசன் தம்பதியினரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தனுஷ் தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களும் போலி என கதிரேசன் மீண்டும் புதூர்  காவல் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்துள்ளார்.

அதில்,  நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் உட்பட அனைத்து ஆவணங்களும் போலி என்று கூறி உள்ளார்.
English Summary
Madurai Kathirisan again complains to Actor Dhanush