தமிழகம் வந்தார் புதிய கவர்னர் பன்வாரிலால்! நாளை பதவி ஏற்பு

சென்னை,

மிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித் இன்று மதியம்12.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ,பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், தமிழக சபாநாயகர் தனபால், பாராளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை,  தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டிஜிபி மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சார்வையும், மலர்கொத்தும் கொடுத்து வரவேற்றனர்.

தமிழகம் வந்துள்ள கவர்னர் காவலர்களின் அணி வகுப்பு மரியாதை ஏற்றார். தொடர்ந்து கிண்டி கவர்னர் இல்லம் பயணமானார்.

பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக நாளை காலை 09.30மணிக்கு பதவியேற்க உள்ளார். அவருக்கு தமிழக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
English Summary
The new governor arrives in Tamil Nadu,