சென்னை,

சென்னை திரிசூலம் விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை  பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை சிஎம்டிஏ தயாரித்துள்ளது.

இந்த திட்டம் மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் பெற்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த செயல்திட்டம் முழு வடிவம் பெற்றால் சென்னையில் இருந்து சுமார் 30 நிமிடத்திற்குள் செங்கல்பட்டை அடைந்துவிடலாம். தற்போது, செங்கல்பட்டை அடைய 1 மணி முதல் 1.30 மணி வரை நேரம் செலவாகிறது.

சென்னையில் ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில்கொண்டு இந்த பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை சுமார் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் சாலை அமைக்க சிஎம்டிஏ திட்டம் தயாரித்துள்ளது.

சுமார் 30 கோடியில தயாராகும் இந்த திட்டத்தின்படி பறக்கும் சாலை 4 வழிப்பாதையாக அமைக்கப்படும். இதன் முதல் கட்டடமாக பல்லாவரத்தில் இருந்து மகிந்திரா ஐடி பார்க் வரை சுமார் 21.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் சாலை அமைக்கவும்,  இரண்டாவது கட்டமாக அங்கிருந்து செங்கல்பட்டு வரை சுமார். 13.6 கிலோ மீட்டர் தூரத்துக்கும் சாலை அமைக்க திட்டமிப்பட்டுள்ளது.

இந்த பாலம் 18 மீட்டர் அகலத்துடன் 4 வழி பாதையாக அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையம், பல்லாவரம், குரோம் பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங் கொளத்தூர், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் வழியாக செங்கல்பட்டுக்கு இந்த பறக்கும்சாலை செல்லும்.

இந்த சாலை அமைக்கும் திட்டம் முழு வடிவம் பெறறார் சென்னையில் ஏற்படும் வாகன நெரிசல்  குறையும்.