சென்னை:  தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு உள்ளது, இருந்தாலும் மக்கள் பயப்பட வேண்டாம் என  தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னை: டிசம்பர் 30 மற்றும் 31ந்தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி  மக்கள் பாதுகாப்பாக இருக்க  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு உள்ளது, இருந்தாலும் மக்கள் பயப்பட வேண்டாம் என  தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,

டிசம்பர் 29, 30, 31 தேதிகள், தென் தமிழகத்தின் சமவெளி பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு மிக குறைவு.

தூத்துக்குடி நெல்லை மக்கள் உங்கள் வழக்கமான வேலைகளை செய்து கொள்ளுங்கள் பயப்பட வேண்டாம்.

மாஞ்சோலை பெல்ட்டில் 60 முதல் 100 மிமீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது அங்கு சகஜம் இன்றும் 50 mm.
இது எந்த சாதாரண மனிதனின் வழக்கமான வாழ்க்கையை பாதிக்காது என குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 30 மற்றும் 31ந்தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை

https://patrikai.com/heavy-rain-warning-in-thoothukudi-and-nellai-districts-on-december-30-and-31-collector-instructs-people-to-be-safe/