டில்லி

மோடியின் ஆட்சியில் ரெயில்வே நிர்வாகம் மோசமாக இயங்குவதாக தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய ரெயில்வே யில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.  முதல் இடத்தில் சீனா உள்ளது.  இந்திய ரெயில்வேயில் வருடத்துக்கு சுமார் 80 கோடி  பேர் பயணம் செய்கின்றனர்.   இதை இந்தியாவின் வாழ்க்கைக் கோடு என பலரும் கூறி வருகின்றனர்.    ரெயில்வேயின் சேவை அந்த அளவுக்கு மக்களுக்கு அத்தியாவசியமாக உள்ளது.

அதே நேரத்தில் ரெயில்வே நிர்வாகம் குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன.   குறிப்பாக ரெயில் கள் ரத்து செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.  கடந்த 2014-15 ஆம் வருடம் 3591 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   ஆனால் 2017-18 ஆம் வருடம் அது ஆறு மடஙகாக அதிகரித்து 21,053 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரெயில்வே பராமரிப்பு குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதிலில், “ரெயில்வே பாதுகாப்பு தண்டவாளம் புதுப்பித்தல் அத்தியவசியாமாகும்.   ரெயில்வேயின் 1.17 லட்சம் கீமீ தூரமுள்ள தண்டவாளங்களில் 4000 கிமீ மட்டுமே புதிப்பிக்கப்பட்டுள்ளன.   மோடி ஆட்சிக்கு வந்த முதல் மூன்று வருடங்களில் அதாவது 2014-17ல் புதுப்பித்தல் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. ” என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தண்டவாளங்கள் அமைத்தலிலும் இந்த அரசு பின் தங்கி உள்ளது.   2016-17 ஆம் வருடம் 953 கிமீ,  2017-18 ஆம் வருடம் 409 கிமீ தூரம் வரை மட்டுமே புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   இது ஒரு நாளைக்கு 1.75 கிமீ தூரம் மட்டுமே இந்த பணி நடந்துள்ளது.   இதை அரசின் சாதனை என சொல்ல முடியாது.

இதைத் தவிர ரெயில் நிலையம் நவீனப்படுத்தும் திட்டங்களும் மிகவும் மெதுவாகவே நடந்து வருகின்றன.  அது மட்டுமின்றி வெளிநாட்டு ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.   ரெயில் நிலைய நவீனப்படுத்தும் திட்டங்கள் உள்ளாட்சியின் அனுமதி இல்லாததால் தடைபட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் குறிபிட்டுள்ளது.

அதே நேரத்தில் தனியார் பங்களிப்புடன் 13 ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும் என மோடி அரசு அறிவித்தது.  அவை சார்பாக் (லக்னோ), எர்ணாகுளம், கோமதி நகர் (லக்னோ), ஹபிப்கஞ்ச் (போபால்), டில்லி சாரை, ரோகில்லா, ஜம்முதாவி, கோட்டா, கோழிக்கோடு,  மடகாவ், நெல்லூர், புதுச்சேரி, சூரத் மற்றும் திருப்பதி ஆகிய நிலையங்கள் ஆகும்.

ஆனால் தற்போது தகவல் ஆணையம் அளித்த பதிலில் இதுவரை எந்த ஒரு ரெயில் நிலையமும் தனியாருக்கு அளிக்கபடவில்லை என தெரிய வந்துள்ளது.   அதற்கு பதிலாக ரெயில்வேயின் கீழ் உள்ள பிரிவுகள் இந்த நிலையங்களை நிரந்தர கட்டண அடிப்படையில் புதுப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanx : Deccan Herald