புதுடெல்லி:

டாக்டர் ரகுராம் ராஜனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பனார்ஜியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை உரையாட உள்ளார்.

இந்த பேச்சுவார்தையின் போது, பொருளாதார தாக்கம் குறித்து நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், இது சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்லது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பானர்ஜி கொரோனா போன்ற முக்கியமான பிரச்சினைகள் மற்றும் அதன் பொருளாதார தாக்கம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பற்றியும், நாடு எவ்வாறு பொருளாதார ரீதியாக மீண்டும் பாதையில் வர முடியும் என்பதையும் பற்றி பேச ராகுல் காந்தி தொடர்ச்சியான பேச்சு நிகழ்ச்சிகளைத் தொடங்கினார். இந்த உரையாடல்களில் அவர் இந்தியாவில் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்

கடந்த வாரம் ராகுல் காந்தி, முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் பேசினார். அதில் நாட்டின் ஏழைகளுக்கு உதவ 65 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று ராஜன் பரிந்துரைத்தார். ஏழைகளுக்கு டி.என்.டி மூலம் எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ, முதியோர் ஓய்வூதியம் மற்றும் பி.டி.எஸ் மூலம் ஆதரவு வழங்க முயற்சி செய்ய வேண்டும் என்று ராஜன் தெரிவித்திருந்தார். ரடங்கை உயர்த்துவதில் இந்தியா புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்றும் ராஜன் கூறினார். நாடு சாதகமாகப் பயன்படுத்தக்கூடிய வழிகள் உள்ளன. ஆனால் உலகப் பொருளாதாரத்தில் மறுபரிசீலனை செய்யக்கூடும் என்பதால் இந்த சூழ்நிலையில் சாதகமான தாக்கம் இருக்காது என்று நான் நினைக்கிறேன் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார்.