ஜம்மு காஷ்மீர்:

ம்மு-காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீர மரணம் அடைந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகின்றது. இதில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேற்று பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகள் இன்று மீண்டும் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில், சிஆர்பிஎப்-ன் 92வது பட்டாலியனைச் சேர்ந்த 31 வயதான தமிழக வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தமிழக வீரர் சந்திரசேகர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழக வீரருடன் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த இரு வீரர்களும் மரணமடைந்தனர்.