ராகுல் செல்ஃபி எதிரொலி? பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி செல்ஃபி!

டில்லி:

ந்திய தொழிலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் செல்ஃபி எடுத்து வருவதை அறிந்த பிரதமர் மோடியும் பாலிவுட் நட்சத்திர பட்டாங்களுடன்  செல்ஃபி எடுத்துள்ளார்.

க்கிய அரபு எமிரேட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்குள்ள இந்திய வம்சா வழியினர் மற்றும், அங்கு பணி செய்துவரும் இந்திய தொழிலாளர்க ளுடன் எளிமையான பழகியதால், அவர்களும் நண்பனை போல ராகுலை கருதி ராகுலின் தோள்மீது கை போட்டு செல்பி எடுத்துள்ளார்.

ராகுல் செல்ஃபி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்ற வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பாலிவுட்  நட்சத்திர பட்டாளத்துடன் செல்ஃபி எடுத்துள்ளார். பாலிவுட் இளம் நடிகர்கள்  பட்டாளம், தலைநக்ர டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பாலிவுட் இளம் நடிகர்கள் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், கரண் ஜோஹர், நடிகை அலியா பட் உள்ளிட்டோர் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

ராகுலுக்கு போட்டியாக மோடியும் செல்ஃபி மோகத்தில் இறங்கிவிட்டதாக சமூக வளைதளங் களில் வைரலாகி வருகிறது

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: bollywood-stars, Modi Selfie, Prime Minister Modi Selfie, Rahul Selfie, பாலிவுட் நட்சத்திரங்கள், பிரதமர் மோடி செல்ஃபி!, ராகுல் செல்ஃபி
-=-