நகராட்சி ஊழியர்களால் தாக்கப்பட்ட ‘பஜ்ரங்தள்’ நிர்வாகி: உ.பி.யில் பரபரப்பு

Must read

லக்னோ:

பாரதியஜனதா ஆட்சி செய்து வரும் உ.பி. மாநிலத்தில், இந்துத்வா அமைப்பான பஜ்ரங்தள் அமைப்பு நிர்வாகி ஒருவரை  நகராட்சி ஊழியர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்று ஆக்ரா நகராட்சி அலுவலகத்துக்கு சில பெண்களுடன் வந்த பஜ்ரங்தள் நிர்வாகி யான கோவிந்த் பரசார் அங்கு அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்தார். இதன் காரணமாக நகராட்சி ஊழியர்களுக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு  கைகலப்பாக மாறியது.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் சிலர் சேர்ந்து  கோவிந்த் பரசாரை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, நகராட்சி ஊழியர்களிடம் இருந்த கோவிந்த் பராசரை காப்பாற்றி அழைத்துச்சென்றனர்.

விசாரணையின் பஜ்ரங் தலைவரான கோவிந்த் பராசர் கடந்த 55 நாட்களில் 9வது முறையாக இதுபோன்ற அடாவடிதனத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article