ஐக்கிய அரபு அமீரக துணைகுடியரசு தலைவர் ஷேக் முஹம்மதுவுடன் ராகுல்காந்தி சந்திப்பு

துபாய்:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக துபாய் ஐக்கிய அரபு அமீரகம்  சென்றுள்ள நிலையில், அங்கு ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசினார்.

இந்திய வம்சாவழியினர் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் இந்தியர்களை சந்திக்கும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகங்களுக்கு ராகுல் காந்தி 2 நாள் பயணமாக சென்றுள்ளார். நேற்று துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்குள்ள இந்திய தொழிலாளர்களிடையே ராகுல் கலந்துரையாடி செல்பி எடுத்துக்கொண்டது பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘ மகாத்மா காந்தியுடன் 150 வருடங்கள்’ என்ற தலைப்பில் துபாய் வாழ் இந்தியர்கள்  மத்தியில் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள ராகுல், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர்  ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தை சந்தித்து பேசினார். அப்போது இருவரும்  21 ஆம் நூற்றாண்டிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு தொடர்வது குறித்த விவாதித்ததாக கூறப்படுகிறது.

இன்று ஐக்கிய அரபு அமிரகத்தில் ராகுல்காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Congress President RahulGandhi, UAE HHShkMohd, Vice President & Prime Minister of UAE HHShkMohd, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய அரபு அமீரகம் பிரதமர், ராகுல் காந்தி, ராகுல் ஷேக் முஹம்மது பின் ரஷீத் சந்திப்பு
-=-