புதுடெல்லி:
ரும் 12ம் தேதி தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாடுக்கு ராகுல் செல்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதன்படி, இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இதனால், அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பின் மூலம் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி எம்பியாக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்திக்கு எம்.பி பதவி மீண்டும் கிடைத்த நிலையில், வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி வயநாடு செல்கிறார்.

மீண்டும் எம்பியான பின் முதல்முறையாக தனது தொகுதியான வயநாடுக்கு ராகுல் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.