லாரி டிரைவர்களின் சிரமம் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி அவர்களுடன் லாரியில் பயணம்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லாரி டிரைவர்களின் சிரமங்களை கேட்டறிந்த பின் அவர்களுடன் லாரியில் பயணம் செய்தார்.

இதுகுறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள லாரி நிறுத்துமிடத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு அவர்களுடன் சிறிது நேரம் பேசினார்.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்களின் சிரமங்களை தனது பாரத் ஜோடோ யாத்திரை மூலம் நேரடியாக கேட்டறிந்த ராகுல் காந்தி தற்போது டிரக் டிரைவர்களின் சிரமத்தை அறிய அவர்களுடன் லாரியில் பயணம் செய்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.