பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள உணவுக்கூடத்தில் உணவு பரிமாறியதோடு பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்தார்.

ராகுல் காந்தியின் தனிப்பட்ட வருகை குறித்து கட்சியினருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றபோதும் இன்று காலை அமிர்தசரஸ் சென்ற ராகுல் காந்தியை அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

பின்னர் பொற்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த ராகுல் காந்தி சீக்கிய மத வழக்கப்படி தலையில் தலைப்பாகை அணிந்து பாடல்களைப் பாடி அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதனையடுத்து உணவுக் கூடத்தில் உணவு பரிமாறிய அவர் பாத்திரங்களை சுத்தம் செய்து சேவையில் ஈடுபட்டார்.