பாட்னா: நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு,  ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அதன்படி,பீகாரில் உள்ள மொத்த மக்கள் தொகை 13 கோடி பேரில், பொதுப் பிரிவினர் 15.52% என தெரிவித்துள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்டோர் 27.13%; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, எனபிற்படுத்தப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 63.14 சதவிகிதம்எ ன தெரிவித்து உள்ளது.  தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%; பழங்குடி இன மக்கள் 1.69% என்றும் குறிப்பிட்டுள்ளது.

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ஜாதிவாரி கணக்கெடுப்புகள் நடத்த வேண்டும்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசிடம்  வலியுறுத்தி வந்த  நிலையில், பீகார் மாநில அரசு,  ஜாதி அடிப்படையிலான கணக்கெடுபை வெற்றிகரமாக நடத்தி, அதன் தரவுகளை இன்று வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. அத்துடன், . ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் தரவுகளை வெளியிட்ட முதல் மாநிலம்  என்ற பெருமையையும் பீகார் மாநில அரசு பெற்றுள்ளது.

பீஹாரில் ஆட்சி செய்து வரும் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி மாநில   ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது.  இந்த நிலையில், இன்று, அதன் விவரங்களை வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி,

பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310.  இவர்களில்,

 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் அதாவது 27.13 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் அதாவது 36.01 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் அதாவது 19.65 சதவீதம் பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் அதாவது 1.68 சதவீதம் பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.

2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் அதாவது மொத்த மக்கள்தொகையில் 15.52 சதவீதம் பேர் பொது பிரிவினர்.

இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.