டில்லி,
த்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டான 4000 ரூபாய் மாற்றி வாங்க  மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார் ராகுல் காந்தி. இது பொதுமக்களிடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காகவும், டெபாசிட் செய்வதற்காகவும் பொதுமக்கள் வங்கிகளில் குவிந்துள்ளனர்.
பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால், வங்கிகளுக்கு வருவோரின் எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மக்களோடு மக்களாக வரிசையில் ராகுல்காந்தி
மக்களோடு மக்களாக வரிசையில் ராகுல்காந்தி

இதையறிந்த ராகுல்காந்தி அங்குள்ள மக்களை சந்தித்து அவர்கள் படும் இன்னல்களை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து டெல்லி பாராளுமன்ற வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஒன்றில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரூ.4 ஆயிரத்தை மாற்றி சென்றார்.
அப்போது அவருடன் வரிசையில் நின்றவர்கள் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
இது குறித்து ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறுகையில்,
“மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துயுரத்தை பகிர்ந்து கொள்ளவே வரிசையில் நின்றேன். மக்களின் சிரமத்தை உணர்கிறேன்.
மத்திய அரசின் இந்த திட்டம் சாமான்ய மக்களுக்கு பயன்படப்போவது இல்லை.  இது பணக்காரர் களுக்குதான் பலன் தரும், சாமான்யர்களுக்கு சிரமத்தைத்தான் கொடுக்கும்.
எந்த கோடீஸ்வரர்களும் வரிசையில் நிற்கவில்லை. பிரச்சனைகளை சந்திக்கும் சாமான்ய மனிதன்தான் நிற்கிறான்.  இந்த அரசாங்கம் கோடீஸ்வரர்களுக்காக செயல்படக்கூடாது, சாமானியர்களுக்காக செயல்பட வேண்டும்” என்றார்.
மக்களோடு மக்களாக ராகுல் காந்தி வரிசையில் நின்றது அங்கு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.