மோடிக்கு ராகுல்காந்தியின் 3 கேள்விகள்….

Must read

டில்லி:

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 3 கேள்விகள் கேட்டுள்ளார்.

பிரதமர் மோடி அவரது டுவிட்டரில்; ‘‘ மக்களே….மாதந்தோறும் நடந்து வரும் மான்கிபாத் ரேடியோ நிகழ்ச்சிக்கு பலரும் பல கருத்துக்களையும், எண்ணங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டின் முதல் மான்கிபாத் ரேடியோ நிகழ்ச்சி வரும் 28 ம் தேதி நடக்கிறது. கருத்துக்களை என்.எம்.மொபைல் ஆப் மூலம் எனக்கு அனுப்பி வையுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ராகுல்காந்தி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார், அதில், இது போன்று ஏற்கனவே சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கும் பிரதமர் அவர்களே… நான் 3 விஷயங்கள் கேட்கிறேன். அதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று சொலுங்கள்….

# நம்முடைய இளைஞர்களுக்கு வேலை….
# டோக்லாம் பிரச்சனைக்கு முடிவு காணுங்கள்…..
# ஹரியானா பலாத்கார சம்பவங்களுக்கு முடிவு….’’ என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article