குஜராத்: கப்பல் தீ விபத்தில் தூத்துக்குடி என்ஜினியர் பலி

Must read

காந்திநகர்:

குஜராத்தில் எண்ணைய் டேங்கர் கப்பல் தீப்பிடித்ததில் தூத்துக்குடி என்ஜினியர் பலியானார்.

தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் மேன்லின் பெர்னான்டஸ். (வயது 36). மும்பை தனியார் கப்பல் நிறுவன எலக்ட்ரிக் பிரிவு என்ஜினியர். குஜராத் தீனதயாள் துறைமுகத்திற்கு டீசல் இறக்குமதி செய்ய வந்த எம்.டி.ஜெனிசா என்ற எண்ணைய் டேங்கர் கப்பலில் பணியாற்றி வந்தார்.

துறைமுகத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் நின்ற கப்பலில் திடீரென தீப்பிடித்தது. கப்பல் ஊழியர்கள் 23 பேர் மீட்கப்பட்டனர். தீயில் சிக்கிய மேன்லின் பெர்னான்டஸ் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் 21ம் தேதி தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவருக்கு மனைவி ரம்யா மற்றும் 7 வயதில் ரியான் மற்றும் 6 மாத ஆண் குழந்தைகள் உள்ளனர்.

More articles

Latest article