ரஃபேல் பேரம் பாஜக அரசின் நல்ல முடிவில்லை : இந்து என் ராம்

டில்லி

ஃபேல் பேர்ம் பாஜகவின் அரசு காலத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவில்லை என பத்திரிகையாளர் இந்து என் ராம் தெரிவித்துள்ளார்.

 

ரஃபேல் விமான கொள்முதல் குறித்து நடந்த பேரத்தின் போது பாதுகாப்பு அமைசகத்துக்கு இணையாக பிரதமர் அலுவலகமும் பேச்சு வார்த்தை நடத்தியதாக பத்திரிகையாளர் இந்து என் ராம் தெரிவித்திருந்தார். இது கடும் சர்ச்சையை எழுப்பியது. அது மட்டுமின்றி இந்த ஒப்பந்தத்தில் லஞ்ச தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் வங்கி உத்திரவாதம் உள்ளிட்டவை பெறப்படவில்லை எனவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று மற்றொரு புதிய செய்திக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

அதில் காணப்படுவதாவது :

 

ரஃபேல் விமான கொள்முதல் குறித்து தேசிய குழுவின் 7 உறுப்பினர்களில் ஏழு பேர் இந்த பேரம் மோடியின் ஆட்சியில் எடுக்கப்பட்ட சரியான முடிவுகள் இலை என தெரிவித்துள்ளதனர். அவர்கள் மூவரும் இதை மேலும் விவரித்துள்ளனர். அதாவது முதலாவதாக 126 விமானங்கள் வாங்க ஐக்கிய முன்னணி அரசால் திட்டமிடப்பட்டது. அவைகளை 36 ஆக குறைத்தது மட்டுமின்றி அதில் முதல் 18 விமானம் அளிக்கபப்ட வேண்டிய கால கட்டமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டசால்ட் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான யூரோ ஃபைட்டர் நிறுவனம் 25% விலைக்கழிவு அளிப்பதாக குறிப்பிட்டிருந்தது. அதே விலைக் கழிவை டசால்ட் நிறுவனத்திடம் கேட்டு இருந்தால் இந்நிறுவனமும் ஏற்றுக் கொண்டு விலையை குறைத்திருக்க முடியும். ஆனால் பாஜக அரசு அவ்வாறு கேட்கவில்லை. இதனால் விலை குறைப்பு என்னும் பேச்சுக்கு இடமின்றி போனது

இந்திய அரசி பாதுகாப்பு கொள்முதல் அரசுக் குழு இந்த ரஃபேல் விமானங்கள் கொள்முதலில் ஒரு குறிப்பிட்ட அளவு விலையை அதிகபட விலையாக நிர்ணயம் செய்திருந்தது. இந்த குழுவில் பிரதமர் மோடி தலைவராக இருந்தார். ஆனால் ரஃபேல் விமானங்கள் இந்த விலையை விட 55.6% அதிக விலையில் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரான்ஸ் அரசு ஒப்பந்தம் இடும் போது நிலவிய விலையை அடிப்படையாக கொண்டு விலைய நிர்ணம்யம் செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதித்ததே ஆகும்.

அடுத்தபடியாக விமானம் அளிப்பதில் தாமதம் ஆவதை தடுக்க அபராதத்துக்கு வங்கி உத்திரவாதம் அளிக்க வேண்டும் என பேரத்தில் கேட்டுக் கொள்ள்ப்பட்ட போதிலும் இறுதிப் பேரத்தில் அதை அவசியம் என சொல்லவில்லை. ஆகவே பிரான்ஸ் அரசின் கடிதம் மட்டுமே போதும் என கூறப்பட்டது. விமானம் தாமதம் ஆனால் இந்திய அரசு செலவழித்த தொகையை நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும் என பிரான்ஸ் அரசு ஒரு கடிதம் எழுதியதை உத்திரவாதமாக கொள்ளப்பட்டது. டசால்ட் தனியார் நிறுவனம் என்பதால் சர்வதேச அளவில் பிரான்ஸ் அரசின் கடிதம் சட்டப்படி எந்த உத்திரவாதமும் அளிக்கக் கூடியது அல்ல.

என இந்து என் ராம் தனது செய்தி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP Govt, Hindu' N.Ram, Rafale deal, இந்து என்.ராம், பாஜக அரசு, ரஃபேல் பேரம்
-=-