தேர்தலுக்கு முன்பாக குஜராத்தில் கலைக்கட்டும் ”மோடி சேலை”

Must read

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் குஜராத்தில் மோடி உருவம் பதித்த சேலைகளின் விற்பனை கலைக்கட்ட தொடங்கி உள்ளது. மோடியின் உருவம் பந்தித்த சேலைகளுக்கு பெண்கள் வரவேற்பு அதிகரித்துள்ளது.

modi

நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், சேகுவரா, லெனின், நெல்சன் மண்டேலா உள்ளிட்ட தலைசிறந்தவர்களின் உருவம் பதித்த ஆடைகளை ரசிகர்கள் விரும்பி அணிவது வழக்கம். அந்த வகையில் தற்போது அரசியர் தலைவர்களின் உருவம் பதித்த ஆடைகளுக்கு தொண்டர்களிடையே வரவேற்பு அமோகமாக உள்ளது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் பாஜக கட்சியும், எதிர்க்கட்சிகளுக்கு வாக்கு சேகரிப்பது குறித்தும், கூட்டனி அமைப்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவ்வபோது கட்சி தலைவர்களும் மக்களையும் சந்தித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கட்சி தலைவர்களின் உருவம் பொறித்த ஆடைகள் தேர்தலுக்கு முன்பாகவே கலைக்கட்ட தொடங்கியுள்ளன.

saree

சமீபத்தில் பிரியங்கா காந்தி உத்திர பிரதேசம் சென்ற போது காங்கிரஸ் தொண்டர்கள் அவரது உருவம் பதித்த டி-ஷர்ட் அணிந்து அவருக்கு பாதுகாப்பு பணியின் ஈடுபட்டனர். இதற்கு போட்டியாக குஜராத் மாநிலம் கோத்ராவில் நரேந்திர மோடி உருவம் பதித்த சேலை விற்பனைக்கு வந்துள்ளது. மோடியின் உருவம் பதித்த சேலைக்கு அப்பகுதி பெண்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. பலவண்ணங்களில் விற்பனை செய்யப்படும் இந்த சேலையை பெண்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற போது மோடி உருவம் பதித்த ஆடையை அணிந்து கொண்டு ஆபாசமாக போஸ் கொடுத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article