ரபேல் இட்லி

நெட்டிசன் ராஜ்குமார் மாதவன் பதிவு

இந்திரா விலாஸ் வீட்டை சேர்ந்தவங்க அவங்க வீட்டுக்கு தேவையுன்னு இட்லி வாங்க முடிபண்ணுனாங்க. அவங்களுக்கு மொத்தம் 126 இட்லி தேவை. அந்த இட்லியில் , 18 இட்லி பரங்கிமலை விலாஸிலேயே செஞ்சு வாங்கிட்டு , மிச்சம் 108 இக்கு மாவு மட்டும் வாங்கி வந்து தனது வீட்டில் இருக்குற இட்லி சட்டியில இட்லி செய்யலாம்னு முடிவு பண்ணி, இட்லி எப்படி செய்யணும்னு பரங்கிமலை விலாஸ்க்காரங்களே சொல்லியும் கொடுக்கணும்னு பேசி முடிச்சாங்க. அதுக்கு மொத்தமா 792 ரூபாய் விலை பேசி முடிச்சாங்க.

அதுக்குள்ள வீட்டுக்குள்ள தாத்தா வந்தாரு. தாத்தா நல்லவரு வல்லவரு என்று ரொம்ப பில்டப்பு கொடுத்து அவரை வாங்கி வர அனுப்புனாங்க. அவரு பரங்கிமலை விலாஸ் போகும்போதே , வீட்டிலு இருந்து இட்லி சட்டியை எடுத்து சாணி சட்டியோட போட்டுட்டு, போற வழியில தன்னோட நண்பர்,

 

கயிலாங்கடை அணிலை கூட்டிகிட்டு அவர்கிட்ட இருந்த நஞ்சுபோன பிரியாணி அன்டாவோட பரங்கிமலை விலாசுக்கு போனாரு. போனவுடனே, பரங்கிவிலாஸ் காரங்க, இட்லி சட்டியோட தானே வரணும், இப்படி பிரியாணி குண்டாவோட வந்த எப்படினு கேட்க, தாத்தா எனக்கு மாவே வேண்டாம்னு ஒரே போடாபோட்டாரு.

அப்புறம் வெறும் 36 இட்லியை, ஒரு இட்லி 16 ரூபாய் 70 காசுன்னு கொடுக்க சொன்னாரு. ஆனா, ஏற்கனவே பேசுன படி பார்த்த ஒரு இட்லி 5 ரூபாய் 26 காசு தான் வரும்னு சொன்னதுக்கு, மிச்சத்தை நம்ம பிரியாணி அண்டால வச்சு கொண்டுபோற கூலின்னு சரிபண்ணிட்டாரு. மொத்தமா 590 ரூபாய் செலவு செஞ்சாரு.

பழைய விலையில பார்த்த 792 ரூபாயில் 126 இட்லி ( 18 இட்லி + 108 இக்கு மாவு ) வந்திருக்கும். ஆனாலும், ஒரு வழியா 36 இட்லியோட 590 ரூபாய் காலி பண்ணிட்டு ஊடு திரும்பினார் நம்ம தாத்தா . வீட்டுக்கு வந்தவுடனே, 36 இட்லி காணுமா, அதுவும் இவ்வளவு விலை கொடுத்து வாங்கி வந்திருக்கீங்களே என்று எல்லோரும் கத்துனாங்க.

தாத்தா பொறுமையா, இந்த இட்லி கலர் பார்த்தீங்களா, இந்த இட்லிக்குள்ள ஆமைக்கறி இருக்கு அத பார்த்தீங்களா, இந்த இட்லி மாவு மைதாவில் செஞ்சதுனு வடை சுட்டாரு. சரி அப்ப இட்லியை பிச்சு காட்டுங்கனு சொன்னா, எதிரிக்கு தெரிஞ்சா விவகாரம் ஆயிடும்னு பயம் முறுத்துனாரு.

அப்புறம் இந்த பஞ்சாயத்தை, பஞ்சாயத்துக்காரர்கிட்ட கொண்டு போனா, பஞ்சாயத்தாறு இந்த இட்லிப்பற்றிய பேப்பர் கொடுக்க சொன்னாங்க. அந்த பேப்பர் லோக்கர்ல இருக்குனு உதாரு விட்ட தாத்தா மூடிய கவர்ல வச்சு பேப்பர பஞ்சாயத்தாருகிட்ட கொடுத்தாரு.

பஞ்சாயத்தாரும், புரிஞ்சும் புரியாம படிச்சுப்புட்டு ஓகே சொல்லிட்டாங்க. அப்படி சொல்லலைனா பஞ்சாயத்தாரையும் ஆண்டி பின்னால் போனவங்கனு தாத்தா கதை கட்டிவிடுவாரு. மத்தவங்க எல்லாம் திரும்பவும் அந்த பேப்பர் கேட்பாங்கன்னு , லாக்கர்ல இருந்த பேப்பரை எலி தின்னுடுச்சுன்னு கதை கட்டுனாரு தாத்தா.

இப்ப சொல்லுங்க 5 ரூபாய் 26 காசுக்கு வாங்க வேண்டிய 1 இட்லியை,

16 ரூபாய் 70 காசு கொடுத்து வாங்கியது சரியா ?

இட்லிக்குள்ள உண்மையிலே ஆமைக்கறி இருக்குதா ?

லாக்கர்ல வச்ச பேப்பரை எலி திங்க முடியுமா ?

நஞ்சுபோன அண்டா சட்டியில இட்லி சுட முடியுமா ?

வீட்டில இருந்த இட்லி சட்டியை சாணி சட்டியாக்கலாமா ?