அதிமுக அலுவலத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

Must read

சென்னை:
திமுக அலுவலத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்ன உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் வந்து, அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். இதனால் மோதல், கத்திக்குத்து, காவல்துறை தடியடி என அந்த பகுதி கலவரபூமியாக காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் காவல் இணை ஆணையர், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கருத்தில் வன்முறையை தடுக்கும் நோக்கில் 146 சட்ட விதியின்படி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவெடுத்தனர்

காவல்துறையின் பாதுகாப்புடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் ஓ. பன்னீர்செல்வத்துடன் சீல் வைப்பதற்கான உத்தரவு நகலை அளித்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், அதிமுக அலுவலத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்ன உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

More articles

Latest article