பஞ்சாப்: ஒரு சதவிகித கமிஷன் பேரம் தொடர்பாக  பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சிங்லாவின் பதவியை பறித்த, அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான்  பறித்து நடவடிக்கை எடுத்த நிலையில், அவரை காவல்துறையினர் அ கைது செய்தனார். ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதை அடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விஜய் சிங்கலா கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில், ஆம்ஆத்மி கட்சி முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக பதவி ஏற்றதுமே, அமைச்சர்கள் பற்றி ஊழல் புகார் தெரிவிக்கலாம் என்றும், அது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பகவந்த் மான் பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அது தொடர்பாக வாட்ஸ் அப் எண்களையும் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில்,அரசு ஒப்பந்தங்களில் 1 சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என அமைச்சர் விஜய் சிங்லா, அதிகாரிகளை நிர்ப்பந்தித்ததாக புகார் எழுந்தது.   ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சிங்லாவின் பதவியை பறித்து, அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சாதா, சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊழலின் அடிப்படையில் தங்கள் சொந்தக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேர்மையும், துணிச்சலும், நேர்மையும் கொண்ட ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சி தான். டெல்லியில் பார்த்தோம், இப்போது பஞ்சாபில் பார்க்கிறோம். பஞ்சாப் முதல்வரின் பாராட்டுக்குரிய முடிவு” என தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர்  விஜய் சிங்லாவை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழலுக்காக ஒரு அமைச்சர் உடனே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.