சென்னை: சர்க்கரை விலையேற்றத்தை தடுக்க ஏற்றுமதியை 10மில்லியன் டன்னுக்கு மேல் அனுமதி கிடையாது என மத்தியஅரசு புதியகட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக உணவு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்த நிலையில், சர்க்கரை விலையும் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது.

அதன்படி, 10 மில்லியன் டன் சர்க்கரைக்கு மேல் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனேவே கோதுமை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்த நிலையில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.