எதிரி தொல்லை நீக்கும் சிந்தாமணி விநாயகர்
எதிரிகளால் அடிக்கடி தொல்லைகளுக்கு ஆளாகிறீர்களா….உங்களுக்குத் தீர்வு அளிக்கக் காத்திருக்கிறார் சிந்தாமணி விநாயகர். சுயம்பு வடிவில் இருக்கும் இவரது கோயில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு அருகிலுள்ள தேவூரில் உள்ளது.
அபிஜித் என்னும் மன்னருக்கும், ராணி குணவதிக்கும் நீண்ட காலமாகக் குழந்தையில்லை. வைசம்பாயனர் என்னும் முனிவரின் ஆலோசனைப்படி யாகம் நடத்த ஆண் குழந்தை பிறந்தது. கணராஜா எனப் பெயரிட்டு வளர்த்தனர். இளைஞனாக வளர்ந்த கணராஜா ஒருமுறை படைவீரர்களுடன் வேட்டையாடச் சென்றான். ஓய்வு எடுக்க விரும்பிய அவன், அருகில் இருந்த கபில முனிவர் ஆஸ்ரமத்திற்குச் சென்றான். கணராஜா உள்ளிட்ட அனைவருக்கும் அறுசுவை உணவை வழங்கினார் முனிவர்.
கணராஜாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. விருப்பத்தை நிறைவேற்றும் சிந்தாமணி என்னும் ஆபரணம் ஒன்று முனிவரிடம் இருப்பதே இதற்குக் காரணம் என்பதை அறிந்தான். அதை முனிவரிடம் இருந்து அபகரித்துத் தப்பித்தான். வருத்தம் அடைந்த முனிவர் ஆபரணத்தை மீட்டுத் தரும்படி துர்கையைச் சரணடைந்தார். ‘48 நாட்கள் விநாயகரை வழிபட்டால் பிரச்னை தீரும்’ என அசரீரி ஒலித்தது.
முனிவரும் வழிபாடு செய்யவே, விநாயகர் ஆபரணத்தை மீட்டுக் கொடுத்தார். ஆனால் தன்னிடம் இருப்பதை விட, விநாயகரிடம் இருப்பதே பொருத்தமானது என ஒப்படைத்தார் முனிவர். சிந்தாமணியைச் சூடியதால் விநாயகர் ‘சிந்தாமணி விநாயகர்’ எனப் பெயர் பெற்றார். அவருக்கு இங்கு கோயில் கட்டப்பட்டது.
சிந்தாமணி என்பதற்குக் கவலையைப் போக்கி நல்வாழ்வு தருபவர் என்றும் பொருள் உண்டு. சதுர்த்தி திதியன்று விரதமிருந்து தரிசிப்பது சிறப்பு. கைகளைக் குவித்து வழிபடுவது வழக்கம். ஆனால் இங்கோ கைதட்டியபடி வழிபடுகின்றனர். சிறிய லிங்க வடிவில் இங்குள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜையைப் பக்தர்களே செய்கின்றனர். ‘மம்மா தேவி’ என்னும் பெயரில் பார்வதிக்குப் பளிங்கு சிலை உள்ளது.
எப்படிச் செல்வது:
புனேவில் இருந்து சோலாப்பூர் சாலையில் 22 கி.மீ., துாரத்தில் லோனி. அங்கிருந்து 3 கி.மீ.,