ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியீடு

Must read

மும்பை:
பிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் புதிதாக இணைந்து விளையாட உள்ளனர். லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள்தான் புதிதாக இணைந்துள்ள இரண்டு அணிகள். இதில் லக்னோ அணியின் பெயர் தற்போது வெளியாகி உள்ளது.

ஆர்.பி. சஞ்ஜீவ் கோயங்கா குழுமம் உரிமையாளராக உள்ள இந்த அணிக்கு ‘லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரை இந்த அணி தற்போது தக்கவைத்துள்ளது. அடுத்த மாதம் பெங்களூருவில் 2022 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது.

More articles

Latest article