மதுரை

வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

தொடர் மழை காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யானைக்கல் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்லூர் மற்றும் ஆரப்பாளையம் செல்லும் சாலைகளிலும் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.