சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதியை  பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் வேட்புமனுத்தாக்கல், பிரசாரம் என தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

இந் நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அரசாணையின் மூலமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தேர்தல் நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டுமென்று தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.