புதுடெல்லி:

ஸ்வீடனில் நடந்த 1,500 ஓட்டப் பந்தயத்தில் கேரளாவைச் சேர்ந்த ஆசிய சாம்பியன் பியூ சித்ரா தங்கப் பதக்கம் வென்றார்.


கடந்த ஏப்ரல் மாதம் தோஹாவில் நடந்த ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில், 4 நிமிடங்கள் 12.65 வினாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து தங்கம் வென்றார்.

கடந்த 2014-ம் ஆண்டு 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் காமன்வெல்த் சாம்பியன் பட்டம் வென்ற கென்யாவைச் சேர்ந்த மெர்ஸி இரண்டாம் இடம் பெற்றார்.

இந்நிலையில், ஸ்வீடன், ஃபோக்சமில் நடந்த பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் சித்ரா தங்கம் வென்றார்.

நெதர்லாந்தில் ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில், ஜின்சன் ஜாஜ்சன் 3 நிமிடங்கள் 39.69 வினாடிகளில் இலக்கை நிறைவு செய்தார்.

வேறு ஒரு உயரம் தாண்டுதல் போட்டியில், முரளி ஸ்ரீசங்கர் தேசிய சாதனை படைத்து தங்கம் வென்றார்.