‘பி.எஸ்.எல்.வி – சி 39’ மீண்டும் ஏவ இஸ்ரோ திட்டம்!

Must read

ஸ்ரீஹரிகோட்டா,

டந்த மாதம் ஆகஸ்டு 31ந்தேதி விண்ணில் ஏவப்பட்டட   பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் தோல்வி யில் முடிந்தது. இதைத்தொடர்ந்து அதே வகையிலான புதிய ராக்கெட் நவம்பரில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கனவே செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய செயற்கை கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

அதன் காரணமாக  1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கை கோளை இஸ்ரோ வடிவமைத்து ‘பி.எஸ்.எல்.வி – சி 39’ ராக்கெட் மூலம் கடந்த ஆகஸ்டு 31ந்தேதி விண்ணில் ஏவியது.

ஆனால், திட்டமிட்ட புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படாமல், இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. எனினும், அடுத்த திட்டம், வரும், நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்படும் என, இஸ்ரோ அறிவித்துள்ளது.

. இதுகுறித்து, இஸ்ரோ தலைவர், கிரண் குமார் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி., – சி 39 திட்டம் தோல்வியடைந்தது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதன் முடிவுகள் அடிப்படையில், அடுத்த திட்டத்தில், இந்த தவறுகள் இல்லாமல் சரி செய்யப்படும். ராக்கெட்டில் பிரச்னைகள் ஏதுமில்லை.

எனினும், செயற்கைக்கோள் தனியாக பிரிவதில், தொழில்நுட்ப பிரச்னை இருப்பதை கண்டறிந்து உள்ளோம். நவம்பர் அல்லது டிசம்பரில், மீண்டும், பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article