குருகிராம்:

ரியான் பள்ளி மாணவன் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக அறிவி க்கப்பட்டுள்ளது. முன்னதாக சிபிஐ வசம் இந்த வழக்கை ஒப்படைக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படும் என்று மாணவனின் பெற்றோர் கூறியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது.

கடந்த 8ம் தேதி குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளி 2ம் வகுப்பு மாணவன் பள்ளியின் கழிப்பிடத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான். கூரான ஆயுதம் கொண்டு மாணவன் கழுத்து அறு க்கப்பட்டிருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி பேருந்து நடத்துனர் அசோக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பள்ளி நிர்வாகிகள் இருவரிடம போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் சிஇஓ பின்டோவுக்கு போலீசார் 14 நாட்கள் கழித்து இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

‘‘இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்’’ என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கடந்த 15ம் தேதி அறிவித்திருந்தார். ‘‘அவர் அறிவித்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்படவில்லை. இதனால் ஆதாரங்கள் அழிக்கப்படும். சிபிஐ அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்தை பார்வையிட வேண்டும்’’ என்று மாணவனின் தந்தை தெரிவித்தார்.

வரும் 25ம் தேதி பள்ளி திறந்தவுடன் ஆதாரங்கள் அழிக்கப்படும் அச்சம் இருக்கிறது என்று அவர் பிரதமர், இதர அமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார். இந்த வழக்கில் ரியான் சர்வதேச பள்ளி உரிமையாளர்கள் 26ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு குர்கான் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.