சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்..! பிரபல தயாரிப்பாளர் குமுறல்

Must read

qkmqqlfejfjca
நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ விழாவில் என்னை வேலை செய்யவிடுங்கள் என்று கண்ணீர் விட்டு அழுதார். இந்த அழுகையை கண்ட பல பத்திரிக்கையாளர்கள் ஐயோ பாவம் என்று அவருக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டனர், அப்படி செய்தி வெளியாகி கொண்டிருக்கும் போது அதிர்ச்சிகரமாக சிவகார்திகேயன் மூன்று தயாரிப்பாளர்களை படம் நடித்து தருவதாக கூறி பணம் மோசடி செய்துவிட்டு இப்போது நடிக்க மறுக்கின்றார் என்று செய்தி வெளியானது.
இதை பற்றி விசாரித்த போது ஆமாம் நான் பணம் பெற்றுள்ளேன் ஆனால் மூவரிடம் இல்லை ஞானவேல் ராஜா விடம் மட்டும் தான் பணம் வாங்கியுள்ளேன் அவருக்கு நான் படம் நடித்து கொடுக்கின்றேன் மற்ற இருவரிடமும் நான் பணம் வாங்க வில்லை அவர்களுக்கு நான் படம் நடிக்க முடியாது என்று சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.
maxresdefault
இந்நிலையில், தங்களின் படங்களில் நடிக்காத சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனவே சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தரக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் சினிமா தொழிலாளர் அமைப்பான பெப்ஸியை கேட்டுக் கொண்டது. ஆனால், பெப்சி அதை ஏற்கவில்லை. தற்போது சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அவரின் வாட்ஸ் அப் குழு ஒன்றுக்கு அனுப்பியுள்ள செய்தியில் ‘ நியாயம் கிடைக்கும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து, நான்கு வருடங்களாக காத்திருந்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. தற்போது தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. என் வாழ்க்கை ஊசலாடிக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை கண்ட கோடம்பாக்க சினிமாக்காரர்கள் அவருக்கு போன் செய்து துக்கம் விசாரித்து வருவதாக கூறப்படுகின்றது.

More articles

Latest article