ஆக்லந்து :

நியூசிலாந்து பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா அர்டெர்ன் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார்.

இந்த புதிய அமைச்சரவையில் தொழிலாளர் கட்சி சார்பில் இரண்டாவது முறை எம்.பி.யாக தேர்வாகியுள்ள பிரியங்கா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார்.

நேற்று நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் புடவை அணிந்து கலந்து கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் கேரள மாநிலம் பரவூரை பூர்வீகமாக் கொண்ட பிரியங்கா சென்னையில் பிறந்தவர் என்பதும், நியூசிலாந்து அமைச்சரவையில் இடம்பெறும் முதல் இந்தியர் என்பதும் குறிப்பிடதக்கது.

இவருக்கு இளைஞர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவரது கணவர் ரிச்சர்ட்சன் தகவல் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றுகிறார்.

இவரது கொள்ளு தாத்தா கேரள இடதுசாரி கட்சியில் இருந்தவர் என்பதும் கேரள மாநில பிரிவின் போது முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

ஆக்லாந்தில் நேற்று தனது தொகுதி மக்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்த அறிவிப்பு வந்திருப்பது அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.