சென்னை

லையாளம், தமிழ் மற்றும் இந்தியில் சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் ப்ரியதர்ஷன்.   இவர் சமீபத்தில் இயக்கிய தமிழ்ப்படம் “சில சமயங்களில்”.  இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.    இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் படம் பல திரைப்பட விழாக்களில் பரிசுகள்  பெற்றுள்ளது.

சுமார் 90 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவராக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.  எய்ட்ஸ் நோயால் தாம் பாதிக்கப்பட்டுள்ளோமோ என பயப்படுபவராக அவர் நடித்துள்ளார்.

இயக்குனர் ப்ரியதர்ஷன் இந்த படத்தை திரையரங்குகலில் வெளியிட முடிவு செய்திருந்தார்.   ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் திரையரங்குகளில் வெளியிட முடியாது என்பதால் அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.    இன்று முதல் நெட்பிளிக்ஸ் இணைய தளத்தில் வெளியாகும் இப்படத்தை கட்டணம் செலுத்தி டவுன்லோட் செய்து பார்க்க முடியும்.

ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்கள்  நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட்ப்பட்டுள்ளது.